எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள், நாங்கள் செயல் வீரர்கள்-முதல்வர் பழனிசாமி

சேலம், மார்ச்-04

11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ரூ.565 கோடி மதிப்பிலான, மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர்வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி இன்னும் 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும். குடிமராமத்து திட்டம் குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். குடிமராமத்து திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டது.

திட்டங்களை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு இது அல்ல, எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள் ஆனால் நாங்கள் செயல் வீரர்கள்.   காவிரி – கோதாவரி திட்டம் நிறைவேற்றப்பட்டால் 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும். மத்திய அரசின் உதவியுடன் ஆந்திரா, தெலுங்காணா முதலமைச்சர்களுடன் இணைந்து இந்த திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *