கொரோனா வைரஸ் எதிரொலி- பிரதமர் மோடியின் ஹோலி கொண்டாட்டம் ரத்து!!!

டெல்லி, மார்ச்-04

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சீனா உட்பட உலகம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,000ஐ எட்டியுள்ளது. சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு மூவாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் தற்போது டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதை தவிர்க்குமாறு சுகாதார துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *