இமாலய உச்சத்தில் ஆபரண தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.1024 உயர்வு!!!

சென்னை, மார்ச்-04

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் தொடர் விலை ஏற்றம் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸும் தங்கத்தின் தொடர் விலையேற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  இதன் எதிரொலியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ரூ4.153-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,600 குறைந்து ரூ.50,100-க்கு விற்பனையாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *