பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் எகிப்து பயணம்!!!

டெல்லி, மார்ச்-04

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் எகிப்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில் வருகிற 13-ந் தேதி இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அந்த மாநாடு முடிந்ததும் இந்தியா திரும்பும் வழியில் அவர் எகிப்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

அங்கு வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரதமர் மோடி இதுவரை எகிப்து நாட்டுக்கு சென்றது இல்லை. கடைசியாக 2009-ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் எகிப்துக்கு சென்றார். அதன் பிறகு இப்போது நரேந்திர மோடி செல்கிறார்.  

எகிப்தில் அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எகிப்து நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த நட்புறவு உள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு எகிப்து அதிபரும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். இந்தியா- எகிப்து இடையே பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே 1978-ம் ஆண்டு முதல் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தமும் இருக்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டில் மட்டுமே 5 மடங்கு வர்த்தகம் அதிகரித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *