கோமாளி போல் விளையாடி மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்-மோடியை சாடிய ராகுல்

டெல்லி, மார்ச்-03

கோமாளி போல் விளையாடி இந்தியாவின் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு வாயிலாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

உலகையே அச்சறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்து வரும் திட்டம் தொடர்பான விடியோவை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கினை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளதாவது:  

உங்களது சமூக ஊடக கணக்குகளை வைத்து கொண்டு கோமாளி போல் விளையாடி இந்தியாவின் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தியா ஒரு நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கும் சமயத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து ஒவ்வொரு இந்தியனையும் காப்பதற்கான திட்டங்கள் குறித்துதான் பிரதமரின் முழு கவனம் இருக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை இதில் பாருங்கள்.  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *