டெல்லி வன்முறையில் போலீசாரை துப்பாக்கியால் மிரட்டிய நபர் கைது!!!

உத்தரபிரதேசம், மார்ச்-03

டெல்லி கலவரத்தின்போது போலீஸாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் (33) உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே டெல்லியில் ஏற்பட்ட வன்முறையின்போது, மர்ம நபர் போலீஸை துப்பாக்கி காட்டி மிரட்டிய புகைப்படங்கள், விடியோக்கள் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

போலீஸாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய நபரின் பெயர் ஷாரூக் (33) என்பது தெரியவந்தது. ஆனால், ஷாரூக் மற்றும் அவரது உறவினரும், ஆம்ஆத்மி கவுன்சிலருமான தாஹிர் ஹுசைன் உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகினர். மேலும் டெல்லி போலீஸார் ஷாரூக் வீட்டில் நடத்திய சோதனையில், பலதரப்பட்ட வெடிபொருள்களை பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில், டெல்லி போலீஸாரால் ஷாருக் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *