சூர்யா ரசிகர்களுக்கு சூடான அப்டேட்….

செப்டம்பர்-26

தெலுங்கு சினிமாவில் நடிகர் சூர்யா நேரடியாக களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கே.வி. ஆன்ந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.  இதை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த சூரரை போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக நடிகர் சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்து பேசியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *