கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படவேண்டாம் – பிரதமர் மோடி

டெல்லி, மார்ச்-03

இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய உயிர் கொல்லியான ‘கொரோனா வைரஸ்’ ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்தது. சீனா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது.

டெல்லியில் இருந்து இத்தாலி சென்று திரும்பிய ஒருவர், துபாயில் இருந்து தெலுங்கானா திரும்பியவர் மற்றும் ராஜஸ்தான் வந்த இத்தாலி நாட்டு பயணி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த தற்காப்பு தகவல்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *