பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு!!!

டெல்லி, மார்ச்-03

மகளிர் தினத்தன்று தனது சமூக வலைத்தளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைத்தளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம். தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் முன்மாதிரியாக திகழும் மகளிர் வசம் மார்ச் 8-ம் தேதி சமூகவலைத்தள கணக்குகளை வழங்க தயார்.

தங்களுக்கு ஊக்கமளித்த பெண் என்ற தலைப்பில் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுங்கள்.. சாதனை பெண்கள் குறித்த வீடியோ பதிவுகளையும் கட்டுரைகளையும் #sheinspiresUS என்ற ஹாஷ்டாக்கில் பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கை ஒரு நாள் முழுவதும் நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப்படும். சாதனை பெண்களின் வாழ்க்கை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *