கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடக்கூடாது- கெஜ்ரி மோடியிடம் வலியுறுத்தல்

டெல்லி, மார்ச்-03

டெல்லி வடகிழக்கில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், எத்தகைய அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும் தண்டிக்காமல் விடக்கூடாது என்று மோடியிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட கலவரத்தில் 46 உயிர்கள் பலியாகின, 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள், பொதுச்சொத்துக்கள், தனியார் உடைமைகள், கார், பேருந்துகள், இரு சக்கர வானங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியை அவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் கெஜ்ரிவால் அவருடன் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின் முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கடந்த சில நாட்களாக டெல்லி போலீஸார் தீவிரமான ரோந்துப்பணி, கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், கலவரம் ஒடுக்கப்பட்டு, ஏராளமான உயிர்கள் பறிபோவது தடுக்கப்பட்டது. இதுபோன்ற வன்முறைகள இனிமேல் டெல்லியில் நடைபெறக்கூடாது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன். அவர்கள் எவ்வளவு பெரிய அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்காமல் விடக்கூடாது என்று வலியுறுத்தினேன். டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *