இந்தியன் – 2 விபத்து: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்

சென்னை, மார்ச்-03

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியான விபத்து தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 19-ம் தேதி, ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். இதுதொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் ஆபரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது பணிபுரிந்தவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் ஷங்கரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் துணை ஆணையர் நாகஜோதி அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *