அமைதி மற்றும் ஒற்றுமையை பாஜக எம்பிக்கள் நிலைநாட்ட வேண்டும்-மோடி

டெல்லி, மார்ச்-03

பகைவர்களையும் நேசிக்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் ஜெபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி கட்சியை விட நாடே முக்கியமானது. கட்சி நலனை விட நம் நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும்.  நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாஜக எம்பிக்கள் நிலைநாட்ட வேண்டும். நாட்டின் வளர்ச்சி, அமைதி, சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு அவசியம் இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *