வண்டலூர் பூங்காவில் இரவுநேர சுற்றுலா-முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, மார்ச்-02

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலா முறையை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், புலி, ஒட்டகம், மான், கரடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்குகளை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் விலங்குகளை கண்டுகளிக்கும் வகையில் இரவு நேர சுற்றுலாவை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *