தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

சென்னை, மார்ச்-02

தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளதையடுத்து, இவ்விரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த கே.பி.பி. சாமி, குடியாத்தம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக பதவி வகித்துவந்த காத்தவராயன் ஆகிய இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் காலமாகினர்.

தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரு தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இறந்ததையடுத்து, இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, இவ்விரு தொகுதிகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *