நிர்பயா வழக்கு: பவன் குமாரின் கருணை மனு நிராகரிப்பு

டெல்லி, மார்ச்-02

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதை தொடர்ந்து நாளை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகி உள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போனது.

குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், அக்‌ஷய் குமார், வினய் சர்மா ஆகிய மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு உள்ளன. தங்கள் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 5-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வருகிற மார்ச் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ந் தேதி தூக்கில் போட கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டது. இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 27-ந் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தவறானது என்றும் தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே குடியரசு தலைவர் முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உள்ளார். மற்ற மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *