டெல்லி வன்முறை ஒரு திட்டமிட்ட படுகொலை-மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மார்ச்-02

டெல்லி வன்முறை மோடி அரசால் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, கொல்கத்தாவில் திரிணமூல் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், குஜராத் கலவரத்தை போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்றும் கடுமையாக தாக்கினார். 

மேலும், டெல்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து நான் மிகவும் வேதனையடைகிறேன். இனியும் இதுபோன்ற நிகழ்வுகளால் மக்கள் உயிரை இழப்பதை நான் விரும்பவில்லை. இன்று இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு குடியுரிமை திருத்த சட்டம் தான் காரணம் என்பதை அமைச்சர் அமித்ஷா நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டெல்லி கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *