இந்தியாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு!!!

டெல்லி, மார்ச்-02

டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து டெல்லி வந்த நபருக்கும், துபாயில் இருந்து தெலுங்கானாவுக்கு வந்தவருக்கும் கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே, கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வைரஸ் பாதித்த இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *