விமானங்களில் வைஃபை வசதி வழங்க மத்திய அரசு அனுமதி!!!

டெல்லி, மார்ச்-02

விமானங்களில் பயணிகளுக்காக வைஃபை வசதி அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் இயங்கும் விமானங்களில் செல்லும் பயணிகளுக்காக விமானத்திலேயே வைஃபை வசதிகளை செய்துதர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

செல்போன் அத்தியாவசிய தேவையாகியுள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்களுக்காக ரயில் நிலையங்களில் மட்டுமின்றி ரயில்களிலும் வைஃபை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகளுக்காக விமானங்களிலும் வைஃபை வசதி செய்து தர, விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயணிகள் விமானத்தில் பயணிப்பவர்கள் இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். விமான தளத்தில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் விமான நிறுவனங்கள் வைஃபை சாதன வசதியை செய்து தரலாம்.

லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ். சாதனங்கள் ஆகியவற்றுக்கு வை-ஃபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த வசதியை ஃபிளைட் மோடில் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *