திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

வேலூர், மார்ச்-02

அனுமதியின்றி செயல்பட்டதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, உரிமம் பெறாத 300-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.  இதைத் தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு சீல் வைக்கப்பட்டது.

காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாக கூறி பொதுப்பணிதுறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *