டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு!!!

டெல்லி, மார்ச்-02

டெல்லி வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தென்கிழக்கு டெல்லியின் ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வன்முறையால் ஏற்கனவே 45 பேர் இருந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுமார் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *