நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!!

டெல்லி, மார்ச்-02

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பவண் குப்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றங்களில் தண்டனைக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். நாளை அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்ற வாரம் பவண் குப்தா, தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அவரின் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *