ரஜினியும், கமலும் நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தது இல்லை-விஜய பிரபாகரன்

சென்னை, மார்ச்-02

ஜாம்பவான்களாக உள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிகர் சங்க தேர்தலில் தனித்தோ இணைந்தோ சந்திக்கவே இல்லை என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

ஆலந்தூர் மேற்கு பகுதி தே.மு.தி.க சார்பில் சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் தேமுதிக கொடி நாள் விழா நடந்தது.

விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சைக்கிள், பெண்களுக்கு தையல் மி‌ஷன், தலைக்கவசம், புடவை ஆகியவற்றை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு விஜய பிரபாகரன் கூறியதாவது: தே.மு.தி.க ஆரம்பித்த போதே தனித்து போட்டியிட்ட கட்சி. அதனால் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி தலைவர், பொருளாளர் மற்றும் கட்சித் தலைமை அறிவிக்கும். கூட்டணியாக இருந்தாலும் தனித்து போட்டியிடுவதாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

ராஜ்யசபா உறுப்பினர் குறித்து அதிமுகவிடம் பேசப்பட்டதாக கட்சி பொருளாளர் தெளிவாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் இது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினர் சீட்டை கேட்டு விட்டோம். இனி என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒப்பந்தம் போடப்பட்ட போது என்ன பேசப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியும்.

ஜாம்பவான்களாக உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிகர் சங்க தேர்தலில் தனித்தோ இணைந்தோ சந்திக்கவே இல்லை. மக்கள் மன்றத்தில் தேர்தலில் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து ஜெயிக்கலாம். ஆனால் நல்ல மனசு இருந்து மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விஜயகாந்த் செய்துள்ளதை நேரில் பார்த்துள்ளேன். ரஜினி, கமல் சொல்வது போல் நடக்காது. 2 பேரும் சேர்ந்து செய்தால் செய்யட்டும் அது அவர்களுடைய முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *