பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்கியது!!!

சென்னை, மார்ச்-02

2019-20-ம் கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

2019-2020 ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.  வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பழைய பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்து 828 தனித்தேர்வர்களும், புதிய பாடத்திட்டத்தில் 2 ஆயிரத்து 655 நேரடி தனித்தேர்வர்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய மையங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக்கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று தமிழகம், புதுவையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்கால கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *