சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை, மார்ச்-02

பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-2021 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 17-ம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்தார். 

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தனபால் அறிவித்தார். மேலும் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் எந்தெந்த நாள்கள் நடைபெறும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *