டெல்லியில் அமைதி திரும்புகிறது-144 தடை உத்தரவு தளர்வு
டெல்லி, பிப்ரவரி-29
டெல்லியில் அமைதி திரும்பி வரும் நிலையில் பரிசோதனை அடிப்படையாக இன்று காலை முதல் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லி பகுதிகளில் கடந்த 23-ம் தேதி முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கடந்த 3 நாட்களாக வன்முறை சம்பவங்கள் ஏதுமில்லை. அமைதி திரும்பியுள்ளது. அமைதி திரும்பி வரும் நிலையில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.