மறைந்த திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் இறுதி ஊர்வலம்-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

வேலூர், பிப்ரவரி-29

மறைந்த திமுக எம்எல்ஏ எஸ்.காத்தவராயனின் இறுதி ஊர்வலத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சின்னபஜார் வீதியை சேர்ந்தவர் எஸ்.காத்தவராயன் (59). இவர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், காத்தவராயன் உடலுக்கு இன்று (பிப்.29) திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *