புனே: சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி
புனே, செப்டம்பர்-26
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு சாலைகளும் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த இரண்டு தினங்களாக புனே நகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வரும் நிலையில், மேலும் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் புனே மாவட்டம் சாகர்நகர் எனும் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் இறந்தவர்களின் சடலத்தை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்