டிரம்ப் வருகைக்கு ரூ.8 கோடிதான் செலவு: குஜராத் முதல்வர் விளக்கம்

காந்திநகர், பிப்ரவரி-29

டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் மொத்தம் ரூ.8 கோடிதான் செலவானது என்றும் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய் ரூபானி
டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.

மொத்தம் ரூ.8 கோடிதான் செலவானது. குஜராத் மாநில அரசு ரூ.4 கோடி செலவிட்டது. அதே அளவு தொகையை அகமதாபாத் மாநகராட்சி செலவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *