சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

சென்னை.பிப்ரவரி. 28

சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்  பாஜக கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டம் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இசுலாமிய அமைப்புகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  பாஜக சார்பாக  தலைநகர் டெல்லி உள்பட் நாடு முழுவதும் ஆதரவு போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் சிஏஏ ஆதரவு பேரணி நடைபெற்றது. சென்னையில் பாஜக.வின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை  அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *