ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்தவருக்கு தூக்கு: தென்காசி நீதிமன்றம்

தென்காசி.பிப்ரவரி.28

ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாதளிக்கு தூக்குத் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம்,  அருகே உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமியின் மகள் பேச்சித்தாய் குடும்பத்திற்கும்  அதே பகுதியைச் சேந்த முத்துராஜ்  என்பவருக்கு தகராறு இருந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய ஆலங்குளம் காவல்துறையினர், முத்துராஜை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால், பேச்சித்தாய் குடும்பத்தினர் மீது முத்துராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16.2.2016 அன்று வேலைக்குச் சென்று  திரும்பிய பேச்சித்தாயை  முத்துராஜ் வழிமறித்து சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பேச்சித்தாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயை காப்பாற்ற வந்த பேச்சித்தாயின் மற்றொரு மகள் மாரியையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமியை வீடுதேடிச் சென்று யும் கொன்றுவிட்டு முத்துராஜ் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து, புகாரின்பேரில், ஆலங்குளம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து, முத்துராஜை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில், அரசுத் தரப்பில் அரசு வழக்குரைறஞர் ராமச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சுமத்தப்பட்ட முத்துராஜிக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *