மெக்சிகோ ஓபன் டென்னிஸ் :அரை இறுதிக்கு முன்னேறினார் நடால்
மெக்சிகோ.பிப்ரவரி.28
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் தென்கொரியாவின் வொன் சூன்-வூவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-2, 6-1 என் புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் கிரிகோர் டிமிட்ரோவ் வாவ்ரிங்காவையும், டெய்லர் பிரிட்ஸ் கைல் எட்மண்ட்-ஐயும், ஜொன் இஸ்னெர் டாமி பால்-யையும் வீழ்த்தினர்.