ஸ்டாலின் மதக்கலவரத்தை தூண்டுகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர், பிப்ரவரி-28

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசும்பொழுது,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதக்கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். சிஏஏவால் தமிழக இஸ்லாமியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என முதலமைச்சர் பேரவையில் கேள்வி கேட்டால், அதற்கு பதில் கூறாமல் வெளிநடப்பு செய்கிறார்.

அதிமுகவினர் காந்தியின் கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது. எம்.ஜி.ஆர். வழியில் வந்தவர்கள். கூட்டத்தில் சத்தம் போடணும், விசில் அடிக்கணும், யாராச்சும் அதிகம் பேசினா கல்லை விட்டு எறியணும், அவர்தான் அதிமுக காரர். காங்கிரஸ்காரர் தான் கையை கட்டி அமைதியாக வேடிக்கை பார்ப்பர்.

மதக்கலவரத்தை தூண்டினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று ரஜினியே கூறியிருக்கிறார். அதை தான் நாங்களும் செய்கிறோம். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *