2 எம்.எல்.ஏ.க்கள் உயிரிழப்பு: பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைவு

சென்னை, பிப்ரவரி-28

இரண்டு நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏ.க்கள் உயிரிழந்ததால், பேரவையில் திமுகவின் பலம் 98 ஆக குறைந்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 2019 மே மாதம் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காத்தவராயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று, நேற்று திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு கட்சியினர் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அடுத்த நாளே மற்றொரு எம்.எல்.ஏ காலமாகி இருப்பது திமுகவினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *