சோகத்தில் மூழ்கிய திமுக… நாளை நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!!!

சென்னை, பிப்ரவரி-28

திமுகவில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் திருவொற்றியூர், குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ.க்கள் உடல் நல கோளாறு காரணமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்த உயிரிழப்புகளால் சட்டமன்றத்தில் திமுகவின் பலம் 98 ஆக குறைந்துள்ளது. இந்த சம்பவம் திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே வேளையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் பிப்ரவரி 29ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக தலைமை ரத்து செய்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக திமுகெ எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், மறுபடியும் கூட்டம் நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *