டெல்லி வன்முறை: உளவுத்துறை அதிகாரி மரணம்: ஆம் ஆத்மி பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு

டெல்லி, பிப்ரவரி-28

டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உட்பட 38 பேர் வரை பலியாகினர்.

உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா மரணத்திற்கு அவரது குடும்பத்தினர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தாஹிர் உசேன் தான் காரணம் என குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து டெல்லி போலீசார் நேற்று தாஹிர் உசேனுக்கு எதிராக கொலை மற்றும் கலவர வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தாஹிர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *