பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியானது திரௌபதி திரைப்படம்

சென்னை, பிப்ரவரி-28

கடும் சர்ச்சைகளுக்கு இடையே இயக்குநர் மோகன் இயக்கிய திரௌபதி படம் வெளியானது

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, சாதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்புக்கு ஈடாக திரௌபதி படத்திற்கு ஆதரவும் பெருகியது.

இந்த நிலையில், பெரும் சர்ச்சைகளுக்கு இடையே திரௌபதி படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் இரண்டு சமூகத்தினர் இடையேயான பிரச்சனை, நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மைய்யப்படுத்தியுள்ளனர். படத்தை பார்த்த பலர் கலவையான விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *