தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திலும் வாரிசுக்கே தலைவர் பதவி…

சென்னை, செப்டம்பர்-26

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க பல்வேறு புதிய விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதனால், மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வு அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்தி வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87-வது பொதுக்கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அச்சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

இதன்மூலம், ரூபா குருநாத் ஒரு மனதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிர்வாகிகளும் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த தேர்வு மூலம் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை ரூபா பெற்றார். ரூபா ஒரு கோல்ப் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *