ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த முடியாது-மேற்கு வங்க அரசு

கொல்கத்தா, பிப்ரவரி-28

மத்திய அரசின், ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் இணைவதற்கு, மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒரு குடும்ப அட்டைதாரர் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த முடியாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில உணவு துறை அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் கூறியுள்ளதாவது: ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு உள்ளதால், இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்.

மாநிலத்தில் ரேஷன் முறையை, ‘டிஜிட்டல்’ மயமாக்க, ஏற்கனவே, 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம். அதை யார் திருப்பி தருவர். இதை தவிர மத்திய அரசு, எங்களுக்கு அளிக்க வேண்டிய, 6,000 கோடி ரூபாயையும் தரவில்லை. கருத்து வேறுபாடு உள்ளதால், ரேஷன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *