மியான்மர் அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி, பிப்ரவரி-27

வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் இந்தியா – மியான்மர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மியான்மர் அதிபர் வின் மைன்ட் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் வின் மைன்ட், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே சுகாதாரம், தகவல் தொடர்பு, பெட்ரோலியம், எரிசக்தி, வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முன்னதாக குடியரசு தலைவர் மாளிகையில் மியான்மர் அதிபர் வின் மைன்டுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் வின் மைன்ட் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *