டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி நபர்களுக்கு தொடர்பு இருந்தால் இரட்டை தண்டனை- கெஜ்ரி உறுதி

டெல்லி, பிப்ரவரி-27

டெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் இரட்டை தண்டனை வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் டெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதாக பாஜக புகார் தெரிவித்து இருந்தது. இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்ததாவது: டெல்லி கலவரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும். கலவரத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் இரட்டை தண்டனை வழங்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *