டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – கெஜ்ரிவால்
டெல்லி, பிப்ரவரி-27
டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.