ரஜினியின் கருத்து நியாயமானது-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர், பிப்ரவரி-27

வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளது நியாயமானது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில், வரும் மார்ச் 3-ம் தேதி மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் அதற்கான விழா ஏற்பாடு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளது நியாயமானது. மத கலவரங்களை தூண்டி விடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் கூறுகிறோம்.

மதக் கலவரங்களை தூண்டி விட்டது திமுக தலைவர் ஸ்டாலின். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், டெல்லியில் கேஜ்ரிவால் போன்றவர்கள் சமூக விரோத சக்திகளை தூண்டிவிட்டதனால் அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *