டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மியும் தான் காரணம்-பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி, பிப்ரவரி-27

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தான் காரணம் என்றும், வீடியோ ஆதாரம் கிடத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால், 34 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள் தான் காரணம்.  சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி நடந்து கொள்கின்றனர். கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.  

ஆனால் இந்த இரு கட்சிகளும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன.  நாங்கள் விசாரணையை ஆரம்பித்து டெல்லியில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *