தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

செப்டம்பர்-26

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலையில் 11 செ.மீ., தருமபுரி, நாகர்கோவிலில் 7 செ.மீ., மயிலாடுதுறையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *