சிறுபான்மை மக்களுக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்ட போகிறீர்கள்?- வைரமுத்து

சென்னை, பிப்ரவரி-27

அச்சப்படும் சிறுபான்மையின மக்களுக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்ட போகிறீர்கள்? என கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மத்தியில் நடைபெற்ற வன்முறையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி வன்முறை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: எதிராக வாக்களித்தவருக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்ட போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்.  நன்மை விளையும். எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *