டெல்லி வன்முறை: உடனடி நடவடிக்கை தேவை-காங். நிர்வாகிகள் ஜனாதிபதியிடம் மனு

டெல்லி, பிப்ரவரி-27

டெல்லி வன்முறை விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசு தலைவரை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் இருந்தனர்.

பின்னர் இதுகுறித்து மன்மோகன் சிங் கூறுகையில் டெல்லியில் நடந்த கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் பெரிய அவமானம். அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கதக்கது. ராஜதர்மத்தை காப்பற்ற வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம். எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *