அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு

பீகார், பிப்ரவரி-27

பிறரின் கருத்தை திருடியதாக அரசியல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர் மீது பீகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோர் பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்து கொடுத்தவர் ஆவார். இவர், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

பிரசாந்த் கிஷோர் மீது, பீகார் மாநிலத்தில் கருத்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹரியை சேர்ந்த ஷாஷ்வத் கவுதம் என்பவர், சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது அரசியல் வியூகமான ‘பீகார் கி பாட்’ என்ற கருத்தை பிரசாந்த் கிஷோர் திருடி, ‘பாட் பீகார் கி’ என மாற்றி, பிரச்சார இயக்கத்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், இதற்கு முன்பு தன்னுடன் வேலைபார்த்த ஒசாமா என்பவர், கிஷோருக்கு இந்த யோசனையையும், வியூகத்தையும் கொடுத்ததாகவும், கிஷோர் அதை தனது சொந்த பிரச்சாரத்திற்கு இதே பெயரில் பயன்படுத்தியதாகவும் கவுதம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் மீது 420, 406 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *