டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு

டெல்லி, பிப்ரவரி-27

டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் கடந்த 23-ம் தேதி டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மத்தியில் நடைபெற்ற வன்முறையில் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வன்முறையில் படுகாயமடைந்த பலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர். இதனால் தற்போது டெல்லி வன்முறை உயிரிழப்பு 34 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *