திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி காலமானார்

சென்னை, பிப்ரவரி-27

திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி. சாமி (59). இவர் கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது வீட்டிலேயே மரணமடைந்தார். அங்கு வந்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததை உறுதி செய்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக இருந்த இவர் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 2016-இல் திருவொற்றியூர் தொகுதி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *