20 ரூபாய்க்கு தரமான, சுத்தமான இயற்கை உரம்…

செப்டம்பர்-26

செல்பேசியில் தொடர்பு கொண்டால், தரமான இயற்கை உரம், மலிவு விலையில்     நேரடியாக வீடுகளுக்கே   கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நாள் தோறும் சுமார் 4,800 மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் கொட்டப்படுகிறது.

பின்னர் இவற்றில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை 18.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்யும் பணியையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உரக்கிடங்குகளில் இருந்து நாள்தோறும் 400 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதுவரை, 160 மெட்ரிக் டன் அளவில் இயற்கை உரம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் மாநகராட்சி பூங்காக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி, இயற்கை உரம் கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை உரம் தேவைப்படுவோர்,     94451 94802 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டால், வீடுகளுக்கே, உரம் விற்பனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *